ஜெம் வீரமணியின் வீட்டில் போலீசார் புல்டோசர் மூலம் சோதனை நடத்தினர். பாலியல் சீண்டல் வழக்கில் கைதான அவர் வீட்டில் கொலை சம்பவம் நடந்ததா என விசாரணை நடைபெறுகிறது.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதான தொழில் அதிபர் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டுக்கு இன்று மதியம் போலீசார் திடீரென புல்டோசருடன் சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டின் பின்புற வளாகத்தில் உள்ள காலி இடத்தை தோண்டி பார்த்தனர்.
வீரமணி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் வீட்டு வளாகத்தில் யாராவது கொன்று புதைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் போலீஸ் தரப்பில் எதற்காக சோதனை நடைபெறுகிறது என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.