தமிழக செய்திகள்

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்ட நூல்களில் பல போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் மிகப்பெரிய ஊழல் அம்பலம்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவை பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்ட நூல்களில் பல போலியானது என கண்டறியப்பட்ட நிலையில் மிகப்பெரிய ஊழல் அம்பலமாகியுள்ளது.

அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் நூலகங்ளுக்கு வாங்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பு நூல்கள் போலி என கண்டறியப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூல்கள் உருவாக்கி நூலகங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நூலகங்களுக்கு போலி நூல்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT