தமிழக செய்திகள்

பதவியேற்பு விழாவை புறக்கணித்த மற்றொரு ஐயூஎம்எல் எம்எல்ஏ - அதிருப்தியில் இருப்பதாக தகவல்

ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது.

2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் விரிவாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்து 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்று அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டது. மொத்தம் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.

வாணியம்பாடு, பாபநாசம் தொகுதிகளில் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இதில் வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷாவும், பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஐ.யூ.எம்.எல். கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என சையத் பாரூக் பாஷா எதிர்பார்த்திருந்த நிலையில், ஷாஜகானுக்கு பதவி கிடைத்ததால் அவர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சையத் பாரூக் பாஷா இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT