தமிழக செய்திகள்

வேலூரில் அண்ணாமலை வரவேற்பு பேனர்கள் கிழிப்பு-கால்வாயில் வீச்சு: பா.ஜ.க.வினர் அதிர்ச்சி

பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

வேலூர்:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT