தமிழக செய்திகள்

அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்: சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்

பா.ஜ.க. என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரம் என சண்முகம் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது கட்சியாக மாற்றப்பட்டு வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அண்ணாலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறிய நிலையில், சி.பி.எம். மாநில பொது செயலாளர் சண்முகம் அதை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை கட்சி தொடங்குவது குறித்து சண்முகம் கூறியதாவது:-

பா.ஜ.க. என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரம்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.

வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி- அமித் ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்பதை தமிழக மக்கள் நன்று அறிவார்கள்.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.