பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
* டிசம்பர் 4-ந்தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்து விட்டேன்.
* புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன்.
* தமிழ்நாட்டில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன்.
* அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
* தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.
* புதிய தொண்டர்களை தயார்படுத்த கொஞ்சம் காலம் ஆகும்.
* அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தபோது முதலில் நல்லக்கண்ணு ஐயாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
* எல்லா நிறுவன மேலிடத்திலும் தமிழன் இருக்கிறான். அவர்கள் எல்லாரும் நமது இயக்கத்தில் பங்களிக்க வேண்டுமென்பதே என் ஆசை.
* வளர்ந்த பாரதம் இருக்கும்போது முதன்மை மாநிலமாக தமிழகத்தை நிறுத்த வேண்டும்.
* கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆசை.
* அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக நமது கட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.