தமிழக செய்திகள்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தார் அண்ணாமலை.. அடுத்து என்ன?

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன.

தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தனது பிறந்தநாளான வருகிற 4-ந்தேதி அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன. அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கட்சிப் பெயர்கள், கொடி வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி வந்தனர். இதனிடையே ஜூன் மாத தொடக்கத்திலேயே ஓர் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்துள்ளார்.

கட்சி தலைமையிடம் பாஜகவில் இருந்து விலகுவதற்கான விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.