தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரை தவறாக நடத்துகிறார்கள்: அண்ணாமலை

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதால் கூட்டணி வரைபடம் மாறியுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜயை தவறாக நடத்துகிறார்கள் என ’வீ த லீடர்ஸ்’ அமைப்பின் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் ’வீ த லீடர்ஸ்’ அமைப்பின் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கொண்டாடும் தீர்ப்பு அல்ல. வழிபாட்டுக்கு கிடைத்த தீர்ப்பு.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரை தவறாக நடத்துகிறார்கள்.

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதால் கூட்டணி வரைபடம் மாறியுள்ளது.

திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். கூட்டணியின் அடிப்படை அம்சம் மாறப்போகிறது.

ஆனால், முதல்வர் பேசவில்லை. என்ன நடந்தாலும் பேசமாட்டோம். அறிக்கை கொடுக்க மாட்டோம் என்றால் என்ன?

மக்களுக்கு என்ன தெரிந்து கொள்ள முடியும். அறிக்கை வாயிலாகவோ, சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாகவோ பேச வேண்டும்.

தொகுதி மறுவரையறை, 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான அச்சாரமாக பார்க்கிறோம். அடுத்த 6 மாதத்தில் 133வது சட்ட திருத்தம் வரும். இதை சாதாரணமாக செய்ய மாட்டார்கள்.

தமிழகத்தின் உரிமை மீட்கப்பட்டுள்ளது. அரசியல் வரைபடம் மாறப்போகிறது.

காங்கிரசை பழிதீர்க்கும் வாய்ப்பு திமுகவுக்கு வந்தது. பழிதீர்த்துவிட்டார்கள். திமுகவை அணுகுகிறோம் என காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கூறுகிறார். தமிழக காங்கிரஸ் கட்சியினரோ, திமுக அந்தர்பல்டி அடித்துவிட்டதாக தெரிவிக்கிறது.

காங்கிரசிலேயே தமிழகம் மற்றும் மேலிட தலைவர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்து 7.18 சதவீதம் பிரதிநிதித்துவம் குறையாது என்பதால் வீ த லீடர்ஸ் ஆதரவு அளிக்கிறது. 33 சதவீதம் மகளிருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

அடுத்த நடக்கும் தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தலாக இருக்கவேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபத்தை ஏற்றி, திருநீறு பூசிவிட்டு பிறகு இந்து-முஸ்லிம் பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு, வளர்ச்சியைப் பற்றி பேசவேண்டும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT