நடிகரும், ரேசருமான அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.