வீ த லீடர்ஸ் அமைப்புக்கு தனி இணைய தள பக்கத்தை அண்ணாமலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார். இதன் வழியே உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார். இப்போது கட்சியின் இந்த மாத பணிகள், ஏற்கனவே நடத்தி முடித்து இருக்கும் பணிகள், அடுத்து திட்டமிட்டுள்ள பணிகள் ஆகியவை முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.
பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்கள் இணைய தளம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
புதிய அம்சங்களை அலசி, ஆராய்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.