உறவினர்கள் சம்பந்தப்பட்ட மெடிக்கல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிபாளையம் பஸ் நிலையம் பிரிவு சாலையில் இன்று காலை 8 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த மாதாபுத்தை சேர்ந்தவர் நதியா (வயது 40) இவர் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆவாரங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டு உள்ளார். ஊசி போட்டதின் விளைவாக அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் உடம்பில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இதனால் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகி நேற்று இரவு இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட மெடிக்கல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிபாளையம் பஸ் நிலையம் பிரிவு சாலையில் இன்று காலை 8 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலை மறியலில் கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.