தமிழக செய்திகள்

குழந்தைகள் உலகில் அச்சமும், கவலையும் நுழையாமல் பாதுகாப்போம்! - அன்புமணி

பல நேரங்களில் குழந்தைகள் தாயாகவும், தந்தையாகவும் கூட நம்மை அரவணைப்பவர்கள்.

வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகளின் உலகம் அச்சமில்லாமல், மகிழ்ச்சி நிறைந்ததாக தொடருவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உலகில் மாயங்களை நிகழ்த்தும் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஆனால், மீளவே முடியாத சோகம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து மனிதர்களை ஒற்றைச் சிரிப்பிலிருந்து மீட்டெடுக்கும் மாயங்களை நிகழ்த்தும் வலிமை குழந்தைகளுக்கு உண்டு. அவர்கள் கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி ஆகியவற்றின் ஊற்றுகள்.

எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். பல நேரங்களில் குழந்தைகள் தாயாகவும், தந்தையாகவும் கூட நம்மை அரவணைப்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகளின் உலகம் அச்சமில்லாமல், மகிழ்ச்சி நிறைந்ததாக தொடருவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும், பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT