தமிழக செய்திகள்

இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி

பா.ம.க. நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை போட்டியிடுகின்றன. அங்கு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது எனக்கூறிய அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.

பா.ம.க. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அன்புமணியின் இந்த அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.

SCROLL FOR NEXT