சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த காலங்களில் பாமக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளது திமுக.
* ஒரு சில கட்சிகள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர்.
* வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது.
* தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்கும் சத்தியம், இது உணர்வுப்பூர்வமான ஒன்று.
* திமுக கடந்த தேர்தலில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 66-ஐ மட்டுமே நிறைவேற்றி உள்ளது. இது நம்பிக்கை துரோகம்.
* இன்றைய தினத்தில் தமிழகத்தின் முதன்மை பிரச்சனையே போதைதான்.
* திமுக அளித்துள்ள தேர்தல் அறிக்கையானது கதாநாயகனும் இல்லை, வில்லனும் இல்லை.
* திமுக தேர்தல் அறிக்கை ஒரு நகைச்சுவையாக வந்துள்ளது.
* திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவில் இருந்த கனிமொழி மதுவிலக்கு பற்றி குறிப்பிடாதது ஏன்?
* ஒரு பெண்ணாக கனிமொழி தயாரித்த தேர்தல் அறிக்கையில் மதுஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு வாக்குறுதியும் இல்லை.
* 4 வயது குழந்தைகளை கூட பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் தான்.
* எங்கள் தேர்தல் அறிக்கையை தான் எப்போதும் திமுக ஈ அடிச்சான் காப்பி செய்யும், இதுதான் கடந்தகால வரலாறு.
* தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.