தமிழக செய்திகள்

ஆயுத பூசை, சரஸ்வதி பூசை வாழ்த்துகள்!- அன்புமணி ராமதாஸ்

உழைப்பையும், தொழிலையும் கொண்டாடுவதுடன் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவது தமிழர்களின் தனிப்பண்பு.

ஆயுத பூசை மற்றும் சரஸ்வதி பூசை தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய நாள்கள். உழைப்புக்கும், கல்விக்கும் மரியாதை செலுத்தும் இந்நாள்களில் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

உழைப்புக்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூசை, கல்வி மற்றும் கலைகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் சரஸ்வதி பூசை ஆகியவை இன்றும், நாளையும் கொண்டாடப்படும் நிலையில், அவற்றைக் கொண்டாடும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்பிக்கை கொண்டவர்கள்

உழைப்பையும், தொழிலையும் கொண்டாடுவதுடன் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவது தமிழர்களின் தனிப்பண்பு. அதேபோல், கல்வியே அழிக்க முடியாத செல்வம்; அதுவே வாழ்வில் ஏற்றத்தை வழங்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

ஆயுத பூசையும், சரஸ்வதி பூசையும் கொண்டாப்படும் இந்த நாள்களில், தமிழ்நாட்டில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை அனைவருக்கும் வசமாக வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

SCROLL FOR NEXT