தமிழக செய்திகள்

அன்புமணிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை - ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுரை

அன்புமணிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே பாமக பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அன்புமணி ராமதாஸ், முழங்கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

அன்புமணி ராமதாஸுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன் குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

பாமக தலைவர் அன்புமணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT