தமிழக செய்திகள்

வாக்கிங் போகும் இடமா பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி? - அன்புமணி ஆவேசம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி சுவர் எழுப்ப யோசனை கூறிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்தால் முதலமைச்சரின் வீடு அமைந்துள்ள நீலாங்கரையும் பாதிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

* வாக்கிங் போகும் இடமா பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி?

* செயல்படாமல் உள்ள ஈரநில ஆணையம் எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரி எதற்கு?

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முறையாக அறிவிக்கை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்தால் முதலமைச்சரின் வீடு அமைந்துள்ள நீலாங்கரையும் பாதிக்கப்படும்.

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெறும் சாலைப்பணிகளை தற்போது வரை நிறுத்தாதது ஏன்?

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முறையாக அறிவிக்கை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி சுவர் எழுப்ப யோசனை கூறிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

* இத்திட்டத்தில் நடக்கும் சூழ்ச்சி தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT