திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பிற சட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு ஊழல் தடுப்பு நீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நவம்பர் 24 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகேஷின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக புழல் சிறையிருந்து காணொலி காட்சி மூலமாக மகேஷை சிறைத்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.