தமிழக செய்திகள்

பேராசிரியர் அன்பழகனின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் #MKStalin மரியாதை

பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பேராசிரியர் அன்பழகனின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.