தமிழக செய்திகள்

அமோனியா கசிவு விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை- அமைச்சர் ராஜ்மோகன்

64 பேர் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ்மோகன் விரைந்தார்.

பின்னர், அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

64 பேர் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாயு கசிவு குறித்த தகவல்கள் முதலமைச்சர் விஜய்க்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT