திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், தீடிரென ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் தற்போதுவரை 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு வீ தி லீடர்ஸ் அமைப்புத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.