தமிழக செய்திகள்

அமோனியா கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்வு

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசி ஏற்பட்டது.

இந்நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேரும் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு பெண் நேற்று உயிரிழந்தார். அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் மற்றும் சுவாசக்குழாய் எரிச்சல், இருமல், மார்பு அசவுகரியம் மற்றும் பல்வேறு அளவிலான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டது. வாயுக்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT