தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இறால் பதப்படுத்தும் ஆலை அம்மோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது எதிர்பாராத விபத்து.
அமோனியா கசிவு காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். 70 பெண்கள், 4 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த வடமாநிலத்தவர்களின் உடல்கள் தமிழக அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.