தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் சென்று ஆறுதல்

அதீ தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சிலர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ராஜ்மோகன் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அதீ தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளோர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.