தமிழக செய்திகள்

ஆம்பூர் அருகே 100-க்கு போன் செய்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகள் திருமண செய்து கொள்ள விருப்பம் இல்லை என 100-க்கு போன் செய்து போலீசில் புகார் தெரிவித்தார்.

ஆம்பூர் டவுன் போலீசார் சென்று இரு குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆம்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், 32 வயது நபருக்கும் வருகிற 13-ந் தேதி திருத்தணியில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

திருமணம் நடக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மணமகள் திருமண செய்து கொள்ள விருப்பம் இல்லை என 100-க்கு போன் செய்து போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார்

இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீசார் சென்று இரு குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாதது குறித்து தெரிவித்து, எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT