அம்பத்தூர் தொழிற்பேட்டை, டைனிங் சென்டர் முதலாவது தெருவில் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த வெள்ளிப் பொருட்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
கோவிலில் இருந்த உண்டியலை குறிவைக்காமல் வெள்ளி பொருட்களை மட்டும் அள்ளி சென்று உள்ளனர். மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்பிலான 7 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.