தமிழக செய்திகள்

அமராவதி அணை நீர்மட்டம் 30.55 அடியாக சரிவு

60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55. 22 அடியாக இருந்தது. 792 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. அணைக்கு நேற்று 115 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 30.55 அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 57. 58 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழை இன்னும் எதிர்பார்த்த படி பெய்யாதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55. 22 அடியாக இருந்தது. 792 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 99 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.