தமிழக செய்திகள்

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!

அமல்ராஜ் 1996ஆம் ஆண்டு பேட்ச்-ஐச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் தாம்பரம் மாநகர காவல் ஆணையராகவும், கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, அருண் சென்னை காவல் ஆணையராக இருந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக அபின் தினேஷை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது.