தமிழக செய்திகள்

"ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால் "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்- விஜயை சாடிய ஆளூர் ஷாநவாஸ்

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

சென்னை:

'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், த.வெ.க. தலைவரும், 'ஜன நாயகன்' படத்தின் கதாநாயகனுமான விஜய் பேசதாது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி எம்.பி., ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.

இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.

எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.

பொங்கலோ பொங்கல்! என்று விமர்சித்துள்ளார்.