தமிழக செய்திகள்

வாக்குக்கு த.வெ.க., பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு- துரைவைகோ பேட்டி

தமிழக வெற்றி கழகம் வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு.

இடைத்தேர்தலில் தி.மு.க., 3-வது இடத்திற்கு செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 2-வது இடத்தில் அ.தி.மு.க. வரலாம் என அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். ரிசல்ட் வரும்போது தெரியும்.

திருச்சியில் இன்று துரை வைகோ எம்.பி., நிருபர்க ளிடம் கூறியதாவது:-

வேதனை

தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுவர்களை ஈடுபடுத்துவதும், அவர்களை பேசச் சொல்வதும் ஏற்புடைய தல்ல. தேர்தல் என்பது கண்ணியமான முறையில் கருத்துப் பரிமாற்றங்களை செய்வதாக இருக்க வேண்டும். சமீப காலமாக அரசியல் தலைவர்களே தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாசப் பேச்சுக்கள் மற்றும் உருவக்கேலி போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

தவெக

த.வெ.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அடிப்படையற்றது ஆகும். ஊழலற்ற அரசியலே அவர்களின் பலமாக உள்ளது. பண பலமின்றி தேர்தலை எதிர்கொள்ளும் அவர்கள் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். 2 கட்சிகளும் கொள்ளை அடித்த பணத்தை கடந்த தேர்தலில் செலவு செய்து தோல்வி அடைந்தார்கள். தமிழக வெற்றி கழகம் வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு.

தி.மு.க. 3-வது இடம்

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., 3-வது இடத்திற்கு செல்லும் அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 2-வது இடத்தில் அ.தி.மு.க. வரலாம் என அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். ரிசல்ட் வரும்போது தெரியும்.

தமிழக வெற்றி கழகம் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணைய த்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக வரும் 6-ந்தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி நாடாளு மன்ற உறுப்பினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில நிர்வாகி ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம், ஆசிரியர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT