தமிழக செய்திகள்

உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!

மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டபோது, முகத்தாடையில் மு.க.ஸ்டாலின் அஇ

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார்.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய அந்த செய்கை திட்டமிட்ட உடல்மொழி இல்லை என்றும், தான் பேசும்போது எதார்த்தமாக வெளிப்பட்டது என்றும், யாரையும் புண்படுத்தும் செயல் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சரின் இந்த செயல்தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அவை உரிமை மீறல் புகார் மனுவை அளித்துள்ளார் திமுக துணைக் கொறடா கோவி.செழியன்.

சட்டமன்றத்தில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியது, சர்க்காரியா ஆணையம், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. எனவே, முதலமைச்சர் விஜய்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT