தமிழக செய்திகள்

ஆலந்தூரில் 15 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

ஐ.டி.ஐ.க்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் அஜய் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அஜய் அதே பகுதிைய சேர்ந்தவர்களோடு சுற்றி வந்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலந்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சங்கீதா.இருவரும் கிண்டியில் உள்ள லெதர் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்(வயது15) பரங்கிமலை உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஜய் ஐ.டி.ஐ.க்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது அஜய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கழித்து சங்கீதா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அஜய் தற்கொலை செய்து இருப்பதை கண்டு கதறி துடித்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

ஐ.டி.ஐ.க்கு சரிவர செல்லாததை பெற்ேறார் கண்டித்ததால் அஜய் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அஜய் அதே பகுதிைய சேர்ந்தவர்களோடு சுற்றி வந்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT