நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் அஜித் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.