தமிழக செய்திகள்

அ.தி.மு.க அலுவலகம் எங்களது கோயில்..!- சி.வி.சண்முகம்

அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று தவெகவிற்கு ஆதரவு அளித்தனர்.

இதனால், தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஎங்கள் கோயில் அதிமுக அலுவலகம் மீது ஒரு தூசி படவோ, எங்களால் பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறியதாவது:-

அதிமுக தலைமை அலுவலகம் எங்களது கோயில், அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம், தூசு கூட படவிடமாட்டோம்.

சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டன் என்பதை நிரூபித்ததற்குப் பிறகே என் கால் அதிமுக அலுவலகத்தில் பதியும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.