அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
3 பேரின் ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100 சதவீத குதிரை பேரம் என அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசரமாக தவெகவில் இணைந்துள்ளனர்.
மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை.
3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் நடந்துள்ளது" என்றார்.