தமிழக செய்திகள்

பாமக இல்லாவிட்டால் இ.பி.எஸ். சிரமப்பட்டு வெற்றி பெற்றிருப்பார்: சி.வி.சண்முகம்

மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்காக எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார்.

சி. வி சண்முகம் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இன்று தன்னுடைய சுயத்தை இழந்துள்ளது.

கேள்வி எழுப்புவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்நிலையில் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார போக்கில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

தேர்தலின் படுதோல்வியை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அறிந்துள்ளனர். ஆனால் இபிஎஸ் இதை பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக பலரும் கட்சியை விட்டு விலகுகின்றனர். அவர்களை துரோகி என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

அதிமுக தலைமை தன்னை சுயபரிசோதனை செய்ய மறுக்கிறது. தேர்தலின் தொடர் தோவில்களுக்கு பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார்.

மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்காக எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார்.

பாமக கூட்டணி இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி சிரமப்பட்டு வெற்றி பெற்றிருப்பர். 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.