தமிழக செய்திகள்

கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் உரிமைகளை காக்காமல் முதலமைச்சர் விஜய் வாய்மூடி மவுன சாமியாராக உள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கிராமம் தொடங்கி நகரம் வரை எங்கும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது.

மேகதாது அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பதிலளிக்காமல் முதலமைச்சர் விஜய் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டின் உரிமைகளை காக்காமல் முதலமைச்சர் விஜய் வாய்மூடி மவுன சாமியாராக உள்ளார்.

கொலைகள் அதிகரிப்பு

கொலைகள் அதிகரித்துவிட்டது எனக்கூறினால் கடந்த கால கொலைகளை ஒப்பிடுவது சரியா?

ஆடுகளை வெட்டுவதைப்போல் தமிழ்நாட்டில் மனிதர்களை வெட்டும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகள் உள்ள பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தின் அருகிலேயே கொலை நடக்கிறது. போலீசாருக்கு கூட பாதுகாப்பில்லை.

போலீசாரின் சீருடையை பிடித்து இழுக்கின்றனர். எஸ்எஸ்ஐ-ஐ வெட்டிக்கொல்கின்றன்.

பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு. ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT