வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜ லட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் பேசியதாவது:-
வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு கூட்டம் இதுவரை மண்டல அளவிலான 4 கூட்டம் நடத்தி உள்ளோம்.
இதில் சென்னை தவிர மற்ற மாவட்ட விவசாயி களிடம் கருத்துக்கள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கி உள்ளோம். விவ சாயிகள் கருத்துகளின் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட உள்ளது.
கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.
குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர வேண்டும்.
பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள் வைக்கும் அனைத்து கோரிக்கையும் கவனமாக பரிசீலித்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகள் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.