தமிழக செய்திகள்

வேளாண் பட்ஜெட் - சட்டசபையில் இன்று தாக்கல்

வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திருக்குறள் வாசித்தவுடன் கூட்டம் தொடங்கும்.

அமைச்சர் வினோத்

வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரம், விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல், விவசாய சங்கங்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் வேளாண்மை 'பட்ஜெட்' முக்கியத்துவம் பெற்றுள்ளது.