தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவால் விவசாயம் பாதிப்பு- விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கூட்டத்தில் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

வடசென்னை அனல்மின் நிலையம்

பொன்னேரி வட்ட விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் பொன்னேரி அடுத்த இளவம்பேடு தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் நந்தகுமார், முனிரத்தினம், ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் விவசாய பயிர்கள் நாசம் அடைந்து விளைச்சல் குறைவதால் நஷ்டம் அடைவதாகவும் இதற்கான நஷ்டத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். விவசாய பயிர்களை மேய்ந்து நாசமாக்கும் குதிரை மற்றும் மாடுகளை அரசு கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கி

அனுப்பப்பட்டு கூட்டுறவு வங்கியை சிருவாக்கம் ஊராட்சியில் அமைக்க வேண்டும், ஏரி பாசன களங்கள் மற்றும் கால்வாய் வழியாக செல்லும் நீர்வழி பாதையின் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அமைப்பாளர்கள் ஜோதி, வாசு, திருமலை, வினோத், ஒருங்கிணைப்பாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT