தமிழக செய்திகள்

தனது சுயநலத்திற்காக அதிமுகவை அழிக்கிறார் சிவி சண்முகம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சட்டமன்ற தேர்தலில் தோற்ற சிவி சண்முகத்தை மாநிலங்களவை எம்பியாக்கியவர் இபிஎஸ்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சிவி சண்முகம் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்.

* சிவி சண்முகத்திற்கு மீண்டும் பதவியை அளித்தவர் இபிஎஸ்.

* சட்டமன்ற தேர்தலில் தோற்ற சிவி சண்முகத்தை மாநிலங்களவை எம்பியாக்கியவர் இபிஎஸ்.

* விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைய சிவி சண்முகம் காரணம்.

* தனது சுயநலத்திற்காக அதிமுகவை அழிக்கிறார் சிவி சண்முகம்.

* பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளனர்.

* எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.