அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி.
வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு.
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.
நெல்லை - தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.
பொய்க்கால் குதிரை அரசே! இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா?
மாற்றம், புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா?
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு!
வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.
அதுனால actor vijay சார்! PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.