தமிழக செய்திகள்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கு: 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு.தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் .... தேதி அன்று தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.