தமிழக செய்திகள்

ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி- தி.மு.க.வை சாடிய அ.தி.மு.க.

ஏதாவது சித்துவேலை செய்யலாம் என்று திமுக நினைத்தால், அதற்கான பின்விளைவுகள் மே-4 ஆம் தேதிக்கு பிறகு கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரன் இன்று அதிகாலை சிறையில் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உள் நோயாளியாக அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே #யார்_அந்த_SIR என்ற உண்மை தெரியவிடாமல் அவசர கதியில் முடிக்கப்பட்ட இந்த வழக்கை

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் விசாரித்து யார் அந்த சார் என்பது கண்டறியப்படும் என எடப்பாடியார் அறிவித்திருந்த நிலையில்,

ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதை உணர்ந்துவிட்ட திமுக அரசு, பயத்தில், பதற்றத்தில், காபந்து அரசாக இருக்கும் போதே இந்த வழக்கின் போக்கை ஒட்டுமொத்தமாக ஆதாரமின்றி முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறதா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவியுள்ளது.

மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலினும், ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட திமுக அமைச்சரும் தான் பொறுப்பு !

ஏதாவது சித்துவேலை செய்யலாம் என்று திமுக நினைத்தால், அதற்கான பின்விளைவுகள் மே-4 ஆம் தேதிக்கு பிறகு கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்.

SCROLL FOR NEXT