திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடுமலை அதிமுக வேட்பாளரை உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்த பின்னர் பேசும் போது...
தற்பொழுது உடுமலை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மண்ணின் மைந்தர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் கடந்த முறை அமைச்சராக இருந்தபோது எண்ணற்ற பல்வேறு நல திட்டங்களை உடுமலைக்கு செய்துள்ளார் குறிப்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் கால்நடைகள் வளர்ப்பு திட்டத்தில் கால்நடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறலாம் மேலும் தற்பொழுது திமுக வேட்பாளர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபராக இருப்பதால் உள்ளூர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். குறிப்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். தமிழக மக்கள் திமுக அரசை அகற்ற முடிவு செய்து விட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர். அதிமுக ஆட்சியில் சட்டமன்ற பாதுகாக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். போதை பொருட்கள் விற்பனை முழுவதும் கட்டுப்படுத்தப்படும். பாரதப் பிரதமர் கூட ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது.. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது எனக் கூறியதை சொல்லலாம். மேலும் தமிழ்நாட்டில் சொத்து வரி, மின் கட்டண வரி, வீட்டு வரி உட்பட அனைத்து வரிகளும் திமுக ஆட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்பொழுது திமுக அரசு மத்திய அரசு குறித்து பொய்யான தகவல்களை வேகமாக பரப்பி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது . திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை 28 மாதம் கழித்து திமுக அரசு வழங்கினர். அதுவும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தொடர் போராட்டங்கள் தான் மக்களுக்கு கிடைத்தது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிர்க்கு 2000 ரூபாய் வழங்கப்படும், இலவச குளிர்சாதனப்பெட்டி திட்டம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஒருமுறை திமுக வெற்றி பெற்றால் அடுத்த முறை படுதோல்வி அடையும். அதிமுக தோல்வி அடைந்தால் அடுத்த முறை பிரமாண்டமாக வெற்றி பெறும். எனவே வருகின்ற 20 நாட்கள் தேர்தல் பணிகளில் முழுமையாக அதிமுகவினர் ஈடுபட வேண்டும். அதிமுக அரசின் திட்டங்களை அனைத்து கிராமங்களிலும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். திமுகவினர் தேர்தல் பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது கவனமாக அதிமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். உடுமலை சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வாங்கி தரும் நபர்களுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று காத்துக்கொண்டுள்ளது. மேலும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் இரவு பகலாக சோர்வு இல்லாமல் பணியாற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகளில் திமுக அரசால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தின்னை பிரச்சாரம் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். திமுக அரசின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு விழும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது நடிகர் ஆரம்பித்துள்ள கட்சியால் அதிமுகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் கண்காணித்து அதிமுகவிற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் படி அதிமுகவினர் மேற்கொள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே உள்ளூர் வேட்பாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆவது உறுதி.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் சி சண்முகவேலு திருப்பூர் தெற்கு மாவட்ட பாமக தலைவர் காந்தி செல்வம் மற்றும் செயலாளர் ரத்தினவேல் ,தாமாக மாவட்ட தலைவர் ரத்தினவேல் உட்பட கலந்து கொண்டனர்.