தமிழக செய்திகள்

TVK Vijay | கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பிரசாரம் செய்தார்கள் - அதிமுகவை சாடிய ஆதவ் அர்ஜுனா

விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. தயாராக இருந்தது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற த.வெ.க. நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

* அ.தி.மு.க.வுடன் கூட்டணி செல்லவில்லை என்றவுடன் கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பிரசாரம் செய்தார்கள்.

* எவ்வளவு கேவலமான கொடூரமான மனநிலை இருந்தால் இப்படி ஒரு பிரசாரத்தை உருவாக்குவார்கள்.

* கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வினர் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

* அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வோம் என அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க. சேர்ந்து உருவாக்கினர்.

* விஜய் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால்தான் ஜனநாயகன் முடக்கப்பட்டுள்ளது.

* விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. தயாராக இருந்தது.

* விஜய் மதசார்பற்ற கொள்கையில் இருந்து வெளியே வந்தால் அவர் முதல்வர் வேட்பாளர்.

* இந்தி திணிப்புக்கு எதிரான பராசக்தி படத்தை வெளியிட பா.ஜ.க. எப்படி விட்டது?

இவ்வாறு அவர் பேசினார்.