மக்களின் குறைகளைக் களைந்து ஏற்றத்துக்கு முதற்படியாய் முதல்வரின் முகவரித்துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது திராவிட மாடல் அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை!
பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது #DravidianModel அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது… pic.twitter.com/ByWHYEguBh