தமிழக செய்திகள்

2 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள்- நடிகை கஸ்தூரி

கல்யாணம் நடைபெறுவதற்கு முன்பு மணப்பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவது போல் இத்தனை நிபந்தனை? இதை கேள்விபடும் போதே பகீர்... பகீர்... என்கிறது.

த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நடைபெற்று வரும் இழுபறி குறித்து நடிகை கஸ்தூரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது போன்ற இழுபறி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. மக்கள் ஓட்டு போட்டு விட்டு காத்திருக்கிறார்கள். நாளைக்குள் ஒரு முடிவு வரவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி வந்து விடும். இது போன்ற சூழ்நிலையை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. இது என் தனிப்பட்ட கருத்து. ஓட்டு விகிதத்திலும் சீட்டு விகிதத்திலும் விஜய்க்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது விஜய் கூட்டணி இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தமிழக வரலாற்றில் அதுவும் நடந்துள்ளது. அதுதான் நல்லது. ஆதரவு கொடுக்கிறேன் என்று ஆசையை உருவாக்கி விட்டு எத்தனை நிபந்தனை வைக்கிறார்கள் பாருங்கள்.

கல்யாணம் நடைபெறுவதற்கு முன்பு மணப்பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவது போல் இத்தனை நிபந்தனை? இதை கேள்விபடும் போதே பகீர்... பகீர்... என்கிறது.

2 எம்.எல்.ஏ.வை வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இன்னொரு புறம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிலேயே குடியிருக்கிறார்கள். எல்லாமே துரந்தர் வேலையாக இருக்கிறது. இவர்களை வைத்துக் கொண்டு விஜய் எப்படி நல்லாட்சி தர முடியும். அதை விட இவர்கள் எல்லோரையும் விஜய் குடி முழுக வேண்டும். தனியாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.