தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது.
இதில், எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான், இபிஎஸ் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தவெகவில் இணைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவெகவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும்.
அதிமுக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது தவெக அமைச்சர் செங்கோட்டையன்.
50 ஆண்டுகுள் பழமைவாதி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அக்கட்சி தலைமையின் தவறு.
அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்ததால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.