நடிகர் அஜித் 
தமிழக செய்திகள்

முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித் | TN Election 2026

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் அஜித்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திருவான்மியூரில் உள்ள வாக்குச் சவாடிக்கு நடிகர் அஜித் சுமார் 6.45 மணிக்கு வாக்கு செலுத்த வந்தார். அவரை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் கூடினர். மேலும், வாக்காளர்களும் வந்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்படி முன்னதாகவே வாக்களித்தார்.